உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தனித்துவ அடையாள அட்டை எண் பதிவு செய்ய அழைப்பு

தனித்துவ அடையாள அட்டை எண் பதிவு செய்ய அழைப்பு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் விவசாயிகள் தனித்துவமான அடையாள எண்ணுக்கு வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என வேளாண்மை அலுவலர் ஷியாம்சுந்தர் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு: தற்போது விவசாயிகளின் பதிவு விபரங்களுடன் ஆதார் எண், மொபைல் எண், நில உடைமை விவரங்கள் இணைக்கும் பணி அனைத்து கிராம பொது சேவை மையங்களிலும் நடக்கிறது. இதில், 2 அல்லது 3 கிராமங்களில் நிலம் உள்ள விவசாயிகளும் விபரங்களை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பொதுசேவை மையங்களுக்கு நேரடியாக சென்று நில விபரங்கள், ஆதார், தொலைபேசி எண் ஆகிய விபரங்களை அளித்து வரும் 30ம் தேதிக்குள் கட்டணமின்றி பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை