மேலும் செய்திகள்
வேலை கிடைக்காத விரக்தி; எம்.இ., பட்டதாரி தற்கொலை
14-Dec-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை கடத்தி சென்றதாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி . இவர் பிளஸ் 1 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்துவந்தார். கடந்த 19ம் தேதி கடைக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் சிறுமியை தேடி விசாரித்தனர். அதில், கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த ஹரி என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் , சிறுமியை கடத்தி சென்ற ஹரி அவரது தாய் மகேஸ்வரி, சகோதரி கவுசல்யா ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
14-Dec-2024