உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் பறிமுதல் தம்பதி மீது வழக்கு

சாராயம் பறிமுதல் தம்பதி மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கரியாலுார் அருகே வெல்லம், சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் கணவன், மனைவி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரியாலுார் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆத்துார் காட்டுகொட்டாய் பகுதியில் பேரலில் 100 கிலோ எடை கொண்ட வெல்லம் உருகிய நிலையிலும், பிளாஸ்டிக் கேனில் 6.5 லிட்., சாராயமும் இருந்தது தெரிந்தது. உடன், வெல்லம், சாராயத்தை பறிமுதல் செய்து, இது தொடர்பாக, பெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்த பிச்சன் மகன் சுப்ரமணி, அவரது மனைவி சென்னம்மாள் ஆகிய இருவர் மீதும் கரியலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி