டிபன் சாப்பிட வந்தவரை தாக்கிய இருவர் மீது வழக்கு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே டிபன் சாப்பிட வந்தவரை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த ராஜம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கோவிந்தராஜன், 22; தனது நண்பர்களான பாலமுருகன், துரை ஆகியோர்களுடன் அரகண்டநல்லுாரில் சிமெண்ட் லோடு ஏற்ற கடந்த 24ம் தேதி சென்றார். டி.கே. மண்டபத்தில் உள்ள மோகன் டிபன் கடையில் டிபன் சாப்பிட்டனர். தோசை விலை விசாரித்தபோது, ஒரு தோசை 10 ரூபாய் எனக்கு கூறியதாக தெரிகிறது. டிபன் சாப்பிட்டு முடித்தவுடன், ஒரு தோசை 15 ரூபாய் கூறியதால், ஏன் இப்படி மாற்றி பேசுகிறீர்கள் என கோவிந்தராஜன் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த டிபன் கடை உரிமையாளர் மோகன் மகன் குமரேசன், 28; அவரது நண்பர் சம்பத், 36; ஆகியோர் கோவிந்தராஜனை சரமாரியாக தாக்கினார். இது குறித்து கோவிந்தராஜன் அளித்த புகாரின் பேரில் சம்பத் மற்றும் குமரேசன் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.