மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது 'போக்சோ'
06-Nov-2024
கள்ளக்குறிச்சி: சிறுமியை திருமணம் செய்தவர் மீது போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த வெள்ளிமலையை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சுரேஷ், 21; இவர், சில மாதங்களுக்கு முன் 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.கர்நாடக மாநிலம், சிக்கமங்களூர் மாவட்டத்தில் உள்ள எஸ்டேட்டில் பணிபுரியும் சிறுமி, தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடன், சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை திருமணம் தொடர்பாக, அங்குள்ள போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.இதுதொடர்பாக கர்நாடக மாநிலம், மல்லாந்துார் போலீசார் வழக்கு பதிந்து, கள்ளக்குறிச்சிக்கு மாற்றியுள்ளனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, சுரேஷை தேடி வருகின்றனர்.
06-Nov-2024