உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நெற்பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவுரை

நெற்பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவுரை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் ஒரு சில இடங்களில் தண்டுத்துளைப்பான், புகையான் மற்றும் இலைச்சுருட்டுப்புழு தாக்குதல் தென்படுகிறது. மேலும், சில இடங்களில் உவர் தன்மையினால் பாசி வளர்ச்சி தென்படுவதுடன் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் நெல் வயல்களில் மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தைத் தொடர்புகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற்பயிரில் காணப்படும் பிரச்னைகளுக்கு ஏற்றவாறு பரிந்துரைக்கப்பட்ட அளவில் மருந்துகளை பயன்படுத்த வேண்டும். நெல் சாகுபடியை தொடர்ச்சியாக மேற்கொள்வதை தவிர்த்து பயிர்சுழற்சி மேற்கொள்ள வேண்டும். எனவே, தங்கள் வயல்களில் பூச்சி நோய் தாக்குதல் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவதுடன், வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்கள் பயன்படுத்தினால் நெற்பயிர் பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ