உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  தேசிய மல்லர் கம்பம் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வாழ்த்து

 தேசிய மல்லர் கம்பம் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வாழ்த்து

கள்ளக்குறிச்சி: தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டிக்கு புறப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டி மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜினியில் கடந்த 24ம் தேதி துவங்கி வரும் 29ம் தேதி நடக்கிறது. தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தன. இதில் 14,17,19 வயது என மூன்று பிரிவுகளின் கீழ் மல்லர் கம்பம் மற்றும் ரோப் மல்லர் கம்பம் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 மாணவ, மாணவிகள் வீதம் மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர் . தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் கலந்து கொள்ள புறப்பட்ட 24 பேர் கொண்ட குழுவினருக்கு, சி.இ.ஓ., கார்த்திகா வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், ஏர்வாய்பட்டினம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி முதல்வர் நிரஞ்சனி சங்கர் ஆகியோர் சீருடை வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் சாமிதுரை, தினகரன், பரமேஸ்வரி, ஆக்னஸ்மேரி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி