உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டெங்கு காய்ச்சலை தடுக்க ஆலோசனை கூட்டம்

டெங்கு காய்ச்சலை தடுக்க ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகள், ஒன்றியங்கள், ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுத்தமான குடிநீரை விநியோகிக்க வேண்டும். இதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் பாதித்த இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் ஒட்டுமொத்த துாய்மைப் பணிகள் வாரந்தோறும் மேற்கொள்ள வேண்டும். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கைப் பணிகளிலும் அனைத்துத் துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை