உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் இன்று நுகர்வோர் அமைப்பு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் இன்று நுகர்வோர் அமைப்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் இன்று நடக்கிறது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு ஆலோசனைக் கூட்டம் இன்று (22ம் தேதி) மாலை 5:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்குகிறார். டி.ஆர்.ஓ., மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், தாசில்தார்கள் மற்றும் நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து கோரிக்கை மனுக்கள் வழங்கி, ஆலோசனை வழங்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி