உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆற்று பாலத்தில் குப்பை கொட்டுவதால் பாதிப்பு

ஆற்று பாலத்தில் குப்பை கொட்டுவதால் பாதிப்பு

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் சாலையில் கோமுகி ஆற்றுபாலம் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரத்திற்கும மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கோமுகி ஆற்று பாலம் அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சில நேரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனால்கோமுகி ஆற்று பாலம் அருகே குப்பைகள் கொட்டுதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை