உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்

சங்கராபுரம் : கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் எஸ்.குளத்துார் கிராமத்தில் தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொருளாளர் செல்வம் வரவேற்றார். மாநில மகளிரணி துணைச் செயலாளர் அங்கையற்கண்ணி, கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன், ஒன்றிய தலைவர் திலகவதி நாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர் பாப்பாத்தி நடராஜன், சங்கராபுரம் நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் துரை சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கமருதீன், தொழிலதிபர் கதிரவன், வழக்கறிஞர்கள் பால அண்ணாமலை, பிரபாகரன், ரமேஷ்குமார் மற்றும் ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை