உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்

 பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்

சங்காபுரம்: சங்கராபுரத்தில் பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கடந்த 2018-19ம் கல்வியாண்டில் தரிசுக்காடு கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலயா நடுநிலைப் பள்ளியில் பயின்று இடைநின்ற பழங்குடியின மாணவிகள் பொரசப்பட்டு கண்மணி, மொட்டையனுார் கவிதா, வெள்ளரிக்காடு சுஜாதா, நடுதுரைப்பட்டு தீபா, தீபிகா உள்ளிட்ட 5 பேர் கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளி படிப்பை தொடர்ந்தனர். தற்போது உயர்கல்வி பயின்று வரும் இவர்களுக்கு சங்கராபுரம் ஆமீனா அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிர்வாகி இதயத்துல்லா தலைமை தாங்கி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார். இதில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வினோதினி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை