உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சைக்கிள் மீது பைக் மோதி முதியவர் பலி

சைக்கிள் மீது பைக் மோதி முதியவர் பலி

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் முதிவயர் இறந்தார். மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்புதுார் கிராமத்தைச் சேர்ந்த கோபால், 78; இவர், நேற்று காலை 5.30 மணிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் புதுார் கூட்ரோட்டில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்பொழுது எதிர் திசையில் வந்த பைக் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோபால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது தொடர்பாக வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !