உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆட்டோ மோதல்முதியவர் பலி 

ஆட்டோ மோதல்முதியவர் பலி 

கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தை சேர்ந்தவர் முத்துசாமி,75; கடந்த 30ம் தேதி இரவு 7.30 மணியளவில் நீலமங்கலம் பகுதியில் சாலையோரமாக நின்றிருந்தார். அப்போது, கள்ளக்குறிச்சியில் இருந்து கூத்தக்குடி நோக்கி சென்ற ஆட்டோ ஓட்டுநர், சாலையோரமாக நின்றிருந்த முத்துசாமி மீது மோதியுள்ளார்.விபத்தில் பலத்த காயமடைந்த முதியவர் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று உயிரிழந்தார்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை