மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் எலக்ட்ரீஷியன் மின்சார அடுப்பை ரிப்பேர் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருக்கோவிலுார் தாசார்புரத்தைச் சேர்ந்தவர் பாபு, 46; எலக்ட்ரீஷியன். தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை 9:00 மணிக்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது தாய் சரோஜா, 73; மகனுக்கு டீ கொடுப்பதற்காக சென்றபோது, காலில் மின்சார ஓயர் சுற்றியபடி, மின்சார அடுப்பு அருகில் பாபு மயங்கி கிடந்தார்.பாபுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.