உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்சாராம் தாக்கி விவசாயி பலி

மின்சாராம் தாக்கி விவசாயி பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மின்சாராம் தாக்கி விவசாயி இறந்தார். உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ் மகன் பிரான்சிஸ், 28; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு வயல்வெளிக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் திறந்துவிட, மின் மோட்டார் ஸ்விட்ச் ஆன் செய்தார். அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிரான்சிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ