உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  திருக்கோவிலுாரில் எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் தற்கொலை திருக்கோவிலுாரில் பரபரப்பு

 திருக்கோவிலுாரில் எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் தற்கொலை திருக்கோவிலுாரில் பரபரப்பு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், சந்தப் பேட்டை, கனகனந்தலை சேர்ந்தவர் முபாரக் மனைவி ஜாகிதாபேகம், 37. தனக்கனந்தல் கிராம உதவியாளரான இவர், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட சிவனார்தாங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலராக, வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்து, நேற்று மாலை 4:30 மணியளவில் வீடு திரும்பிய ஜாகிதாபேகம், வீட்டிலிருந்த ஊஞ்சல் சங்கிலியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த கணவர் முபாரக், அதிர்ச்சி அடைந்தார். உடன் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் ஜாகிதாபேகத்தை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜாகிதாபேகம் இறப்பிற் கான காரணம், பணியின் போது ஏற்பட்ட அழுத்தமா என திருக்கோவிலுார் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். எஸ்.ஐ.ஆர்., குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் பி.எல்.ஏ., தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருக்கோவிலுாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்