உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வெள்ளத்தில் சிக்கியவர் மீட்பு

வெள்ளத்தில் சிக்கியவர் மீட்பு

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த ஏமப்பேர் கிராமத்தில் ஆற்றில் சிக்கியவரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.அரகண்டநல்லுார் அடுத்த ஏமப்பேர் அருகே அணைக்கரை பகுதியில் வெள்ளத்தை வேடிக்கை பார்ப்பதற்காக சென்ற, வி.புத்துார் கிராமத்தைச் சேர்ந்த, ராதாகிருஷ்ணன் மகன் விஜயபிரபாகரன், 28; வெள்ளத்தில் சிக்கி மணல் பகுதிக்குச் சென்றார். திரும்பி வர முடியாமல் தவித்த அவரை தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மோட்டார் படகுமூலம் விரைந்து சென்று மீட்டு கரை சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ