உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் படிவம் வழங்க வேண்டும்: அ.தி.மு.க., கோரிக்கை மனு

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் படிவம் வழங்க வேண்டும்: அ.தி.மு.க., கோரிக்கை மனு

திருக்கோவிலுார்: ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மட்டுமே வாக்காளர் பட்டியல் திருத்த படிவங்களை வழங்க வேண்டும் என அ.தி.மு.க., சார்பில் திருக்கோவிலுார் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலுார் அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு, மாவட்ட செயலாளர் குமரகுரு அறிவுறுத்தல்படி, வாக்காளர் பதிவு அலுவலர் சப்கலெக்டர் அனந்த் குமார் சிங்கிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த முகாம் திருக்கோவிலுார் தொகுதியில் நடந்து வருகிறது. இதற்கான படிவங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மட்டுமே வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். அரசியல் கட்சிகளின் பாக முகவர்கள் மூலமாக வழங்கினால் அது முறைகேட்டிற்கு வழிவகுக்கும். எனவே படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மட்டுமே வழங்கி திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ