உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சமூக நீதி விடுதி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

 சமூக நீதி விடுதி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

ரிஷிவந்தியம்: பாவந்துாரில் கல்லுாரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் இம்ரான்கான், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பயிலும் மாணவர்கள் தங்கி பயிலும் வகையில், சமூக நீதி விடுதி கட்டடம் கட்ட 7.59 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இரண்டு தளங்களுடன் புதிதாக கட்டப்படும் விடுதியில் 25 அறைகள், குளியலறை, காப்பாளர் அறை, படிப்பக அறை உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியுள்ளது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமிபூஜை செய்து, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். உதவி பொறியாளர் கார்த்திக், ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி, ஹரிஹரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ