உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துாய்மைப் பணியாளர்களுக்கு குப்பை தரம் பிரிப்பு பயிற்சி

துாய்மைப் பணியாளர்களுக்கு குப்பை தரம் பிரிப்பு பயிற்சி

சின்னசேலம், : சின்னசேலம் பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து பெறுவது தொடர்பாக செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது.சின்னசேலம் பஸ் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, துப்புரவு ஆய்வாளர் ராஜா தலைமை தாங்கினார். சுரேஷ், சீனிவாசன் முன்னிலை வகித்தனர். பொதுமக்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பை என எவ்வாறு தரம் பிரித்து பெறுவது.பேரூராட்சி வாகனங்களில் அனுப்பி வைப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் குப்பைகள் தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடமும் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பேரூராட்சிக்குட்பட்ட துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை