மேலும் செய்திகள்
மகள் மாயம்; தாய் புகார்
09-Oct-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார். திருக்கோவிலுார் அடுத்த சோழவாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் கிரிஜா, 20; இவரது பெற்றோர் சென்னையில் தங்கி கூலி வேலை செய்கின்றனர். பிள்ளைகள் பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை வெளியில் சென்ற கிரிஜா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தாய் சுகுணா சென்னையில் இருந்து சொந்த கிராமத்திற்கு திரும்பி பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால், தனது மகளை கண்டுபிடித்து தர கோரி சுகுணா போலீசில் புகார் அளித்தார். திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
09-Oct-2025