உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீடு புகுந்து பணம், நகை கொள்ளை

வீடு புகுந்து பணம், நகை கொள்ளை

தியாகதுருகம்; தியாகதுருகம் அருகே வீடு புகுந்து வெள்ளி பொருட்கள் மற்றும் 5,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த விளக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சையது ஜாபர் மனைவி ஷாகின், 45; சையது ஜாபர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 7:30 மணிக்கு ஷாகின் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். மதியம் 2:30 மணிக்கு சென்று பார்த்தபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு 80 கிராம் வெள்ளி, 5,000 ரூபாய் ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி