| ADDED : ஜன 07, 2024 05:53 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மனைவியை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர் சின்னசேலம் அடுத்த கீழ்நாரியப்பனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; இவரது மனைவி புஷ்பா, 25; இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 பிள்ளைகள் உள்ளனர்.தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.நேற்று மதியம் 12:00 மணியளவில் எஸ்.ஒகையூர் - சிறுமங்கலம் சாலை வழியாக புஷ்பா நடந்து சென்றார்.அப்போது பைக்கில் வந்த மணிகண்டன், புஷ்பாவை வழிமறித்து திட்டி, கொடுவாளால் சரமாரியாக வெட்டினார்.இதில், படுகாயமடைந்த புஷ்பா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார், வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.