உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கணவர் தற்கொலை மனைவி புகார்

கணவர் தற்கொலை மனைவி புகார்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே வயிற்று வலி காரணமாக கணவர் தற்கொலை செய்து கொண்டதாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். திருக்கோவிலுார் அடுத்த அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் அய்யனார், 24. இவரது மனைவி லட்சுமி, 22. இவர்களுக்கு ஒரு வயதில் யாதீஷ் என்ற மகன் உள்ளார்.திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வாரமாக அய்யனார் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை பழனி என்பவர் நிலத்தில் உள்ள வேப்ப மரத்தில் அய்யனார் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !