மேலும் செய்திகள்
இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
3 minutes ago
ஹான்ஸ் விற்ற நபர் கைது
4 minutes ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இரு குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் பாபு மகன் சாகர், 31; இவர், தனது மனைவி கவிதா என்பவருடன் கடந்த 5 வருடங்களுக்கு முன் கள்ளக்குறிச்சிக்கு வந்து, பொம்மை வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஆர்த்தி, ஒன்றரை வயதில் கீர்த்தி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 23ம் தேதி கவிதா தனது இரு குழந்தைகளுடன் கடைக்கு செல்வதாக சாகரிடம் தெரிவித்து சென்றார். தொடர்ந்து பல மணி நேரங்களாகியும் கவிதா வீடு திரும்பவில்லை. உடன் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மனைவி கவிதா மற்றும் இரு பெண் குழந்தைகளை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் சாகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
3 minutes ago
4 minutes ago