| ADDED : ஜன 23, 2024 11:35 PM
கள்ளக்குறிச்சி : சடையம்பட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கட்டடம் திறப்பு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் ரூ.12.43 கோடி மதிப்பில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கட்டப்பட்ட நிலையில் திறப்பு விழா நடந்தது. 5 ஏக்கர் பரப்பளவில், தரைத்தளம் உட்பட 3 தளங்களுடன் கூடிய கல்லுாரி கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.தொடர்ந்து, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, கல்லுாரி முதல்வர் முனியன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள், நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.நிகழ்ச்சியில், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், ஊராட்சி தலைவர் மல்லிகா, ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி, முருகேசன், சுதாமணிகண்டன், ஒன்றிய துணை செயலாளர்கள் சோளமுத்து, தமிழ்செல்வி கோவிந்தன், டி.எஸ்.எம்., கல்லுாரி செயலாளர் அசோக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.