உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் நேர்காணல்

மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் நேர்காணல்

கள்ளக்குறிச்சி -கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான நேர்காணல் நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக்ஷ் முன்னிலை வகித்தனர். முதல்வர் கண்ணன் வரவேற்றார். சென்னை ரானே மெட்ராஸ் லிமிடேட் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினார். இதில் இயந்திரவியல், ஆட்டொமொபைல் ஆகிய துறைகளில் 95 மாணவர்களிடையே நடத்திய நேர்காணலில், 48 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர்கள் விஜயராஜ், சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர். துணை முதல்வர் பாஸ்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை