பேட்டி
இப்பள்ளியில் படித்ததை
பெருமையாக கருதுகிறேன்
இப்பள்ளியில் படித்த நான் எங்கள் ஊரான ரங்கப்பனுாரில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலராக இருந்து மக்களுக்கு சேவை செய்து வந்துள்ளேன். மேலும், இப்பள்ளிக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளேன். மேலும் இப்பள்ளியில் பயின்ற பல மாணவர்கள் அரசியல்வாதிகளாகவும், வெளிநாடுகளிலும் அரசு துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். எங்கள் ஊரில், தற்போது ஊராட்சி தலைவராக உள்ள எனது மனைவி அர்ச்சனா மூலம் ஒரு லட்சம் பனை விதை மரக்கன்றுகள் நட்டு சாதனை செய்துள்ளதை பெருமையாக கருதுகிறேன். காமராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரங்கப்பனுார்,
மாணவர்களுக்கு கல்வி
உபகரணங்கள் வழங்குகிறேன்
இப்பள்ளியில் படித்த போது ஆசிரியர்கள் பல்வேறு துறைகளை பற்றி எடுத்துரைத்தனர். தற்போது நான் தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வருகிறேன். மக்களின் நலனுக்காகவே பாடுபட்டு வருகிறேன். இப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளும் செய்து வருகிறேன். ஆண்டுதோறும் மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகணரங்களை வாங்கி தருகிறேன். மாணவர்களுக்கு அறிவு சம்மந்தப்பட்ட செய்தித்தாள்களை வாங்கிக் கொடுத்து வருகிறேன். -தாஸ் அரசியல்வாதி, தொழிலதிபர் புதுப்பட்டு
பள்ளி வளர்ச்சிக்கு
என்றென்றும் பாடுபடுவேன்
இப்பள்ளியில் படித்த நான், தற்போது ஊராட்சி தலைவராக இருந்து வருகிறேன். பள்ளியில் தனக்கு போதித்த ஆசிரியர்கள் எவ்வாறு நல்வழியில் செல்ல வேண்டும் என்று கூறினார்களோ அவ்வாறே இந்த ஊராட்சிக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறேன். மாணவர்களின் அக்கறையில் அரும்பாடுபட்டும் வருகிறேன். பள்ளியில் மாணவர்களுக்கு வைக்கப்படும் விளையாட்டுப் போட்டிகள் அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசு பொருட்களும் வாங்கி தருகிறேன். நான் படித்த பள்ளி மென்மேலும் வளர்ச்சி அடைய நான் என்றும் பாடுபடுவேன். -சித்ரா ஊராட்சி தலைவர், புதுப்பட்டு
ஆசிரியர்களின் அறிவுரைதான்
என் வளர்ச்சிக்கு காரணம்
இப்பள்ளியில் படித்த நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இன்று அரசியல்வாதியாகவும் தொழில் அதிபராகவும் வளர்ந்து வர காரணம் இப்பள்ளியில் படித்த ஆசிரியர்கள் எனக்கு வழங்கிய அறிவுரைகள்தான். தற்போது என் மனைவி லக்கி நாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். அவரது துணையுடன் நான் இப்பகுதியில் பல்வேறு நன்மைகள் செய்து வருகிறேன். ஏழை குடும்பங்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்து வருகிறேன். நடுநிலைப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு சாதனங்களை வாங்கிக் கொடுத்துள்ளேன். லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்துள்ளேன். -ராஜேந்திரன் அரசு ஒப்பந்ததாரர் லக்கிநாயக்கன்பட்டி