| ADDED : நவ 27, 2025 05:06 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர்கள் புதிதாக நேற்று பொறுப்பேற்று கொண்டனர். தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சப் இன்ஸ்பெக்டர் நிர்வகித்து வந்த 280 போலீஸ் ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வரஞ்சரம், கீழ்குப்பம், கரியாலுார், ரிஷிவந்தியம், மணலுார்பேட்டை, வடபொன்பரப்பி, எலவனாசூர்கோட்டை, எடைக்கல் ஆகிய 8 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராபின்சன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜவ்வாதுஉசேன் பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அதேபோல், கடலுார் மாவட்டம், ராமநத்தத்தில் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ரவிச்சந்திரன் பதவி உயர்வு பெற்று ரிஷிவந்தியம் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றார். மேலும், வடபொன்பரப்பி இன்ஸ்பெக்டராக விவேகானந்த், எலவனாசூர்கோட்டை இன்ஸ்பெக்டராக ஆனந்தன், கீழ்குப்பம் இன்ஸ்பெக்டராக அமலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தரம் உயர்த்தப்பட்ட 8 போலீஸ் ஸ்டேஷன்களில், 5 ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரியாலுார், மணலுார்பேட்டை, வரஞ்சரம் ஆகிய 3 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை.