| ADDED : டிச 08, 2025 05:48 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம் மற்றும் மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம் சார்பில் ரோட்டரி நுாற்றாண்டு மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகன் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட தேர்வு ஆளுநர் செந்தில்குமார், துணை ஆளுநர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமிற்கு நிதியுதவி வழங்கிய ரோட்டரி நிர்வாகிகள் பி. அன்பரசு, ஆர். அன்பரசு, வேல்முருகன், ரமேஷ் ஆகியோர் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர் ஐஸ்வர்யா, முகாமில் பங்கேற்ற 195 பேருக்குப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். இதில், 57 பேர் கோவை சங்கரா கண் மருத்துவமனையின் இலவச அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாம் பணிகளை ரோட்டரி சாசன உறுப்பினர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் கந்தசாமி, கோவிந்தனர், முத்துராமலிங்கம், சீனிவாசன், ஜெயப்பிரகாஷ் செய்திருந்தனர்.