கிருஷ்ண ஜெயந்தி விழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் மற்றும் ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பெருமாள் கோவிலில் காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், திருவாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நாளை 16ம் தேதி காலை 9:00 மணிக்கு பெருமாள் கோவில் வளாகத்தில் உறியடி உற்சவம் துவங்கி, சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் தேரோடும் வீதி வழியாக வீதியுலா நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை யாதவா இளைஞர் அணி சங்கம் மற்றும் கண்ணன் மகால் ராஜேந்திரன், வண்ணமுகில் செய்துள்ளனர்.