உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு : வாராந்திர ஆய்வு கூட்டம்

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு : வாராந்திர ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான வாராந்திர ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்தும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடந்தது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாதாந்திர சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த்குமார்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, போலீஸ் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை