மேலும் செய்திகள்
தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
24-Sep-2024
திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தந்தை, மகன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ், 36. இவரது நண்பர் பிரதாப், 34; இருவரும் நேற்று முன்தினம் இரவு 8:00 மணி அளவில் வழக்கம் போல் மாதேஷ் வீட்டில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.அங்கு வந்த பிரதாபின் மனைவி சரளா, மாதேஷை பார்த்து ஏன் என் கணவரை கெடுக்கிறாய் என கேட்டார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, மாதேஷுக்கும், பிரதாப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பிரதாப்பின் தந்தை வேலுவும் சேர்ந்து, மாதேஷை சரமாரியாக தாக்கினர். காயமடைந்த மாதேஷ் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், பிரதாப் அவரது தந்தை வேலு ஆகியோர் மீது மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Sep-2024