உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புதிய குற்றவியல் சட்டத்தை கண்டித்து கள்ளக்குறிச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்   

புதிய குற்றவியல் சட்டத்தை கண்டித்து கள்ளக்குறிச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்   

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்ட திருத்தங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பக் பெறக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்ட கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க செயலாளர் பழனிவேல், பொருளாளர் இளையராஜா, துணை தலைவர் ஜெய்முருகன், துணை செயலாளர் இளையராஜா, நுாலகர் பாலகிருஷ்ணன் உட்பட வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக கள்ளக்குறிச்சி கோர்ட்டில் இருந்து நான்கு முனை சந்திப்பு வழியாக வழக்கறிஞர்கள் ஊர்லமாக தபால் நிலையம் வரை சென்று கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.Muthuraj
ஜூலை 09, 2024 21:00

பிரச்சினை என்றால் மக்கள் அல்லவே போராடவேண்டும். இவர்கள் ஏன் இப்படி. போராடுகிறார்கள்?


rama adhavan
ஜூலை 09, 2024 20:24

அப்போ இவர்கள் வேறு வேலைக்கு சென்று விடலாமே? மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது இவர்களுக்கு தெரியவில்லையே? பின் வக்கீல் தொழில் எதற்கு?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை