உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஹான்ஸ் விற்ற நபர் கைது

 ஹான்ஸ் விற்ற நபர் கைது

சங்கராபுரம்: மளிகை கடையில் ஹான்ஸ் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த அரசராம்பட்டு கிராமத்தில் சப்இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ராஜக்கண்ணு மகன் மணிமாறன் என்பவரது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பது தெரியவந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளர் மணிமாறன், 32; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 பாக்கெட் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ