உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பஸ்சுக்கு காத்திருந்தவர் மயங்கி விழுந்து சாவு

 பஸ்சுக்கு காத்திருந்தவர் மயங்கி விழுந்து சாவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பஸ்சுக்காக காத்திருந்த தனியார் நகைக்கடை மேலாளர் மயங்கி விழுந்து இறந்தார். சேலம் மாவட்டம், பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் பாபுகுமார், 51; இவர் பெரம்பலுாரில் உள்ள தனியார் நகைக்கடையில் மேலாளராக பணிபுரிகிறார். நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்களை சந்திப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளார். நண்பர்களை சந்தித்தபின், மாலை வீட்டிற்கு செல்ல பஸ்சுக்காக மணிக்கூண்டு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை