உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ராணுவ பிரிவு துவக்க விழா

ராணுவ பிரிவு துவக்க விழா

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை, ராமகிருஷ்ணா வித்யாலயா குரு குலத்தில், தேசிய மாணவர் படையின் ராணுவ பிரிவு துவக்க விழா நடந்தது.அண்ணாமலை நகர் என்.சி.சி., கர்னல் ராவ் தலைமை தாங்கினார். அவர், தேசிய மாணவர் படை இளைஞர்கள் ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் உறுதுணையாக இருந்து நல்வழிப்படுத்துகிறது என பேசினார். சிறப்பு விருந்தினராக கர்னல் சக்கர போர்த்தி கலந்து கொண்டார். குருகுல தாளாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம பிரிய அம்பா ஆசி வழங்கினார். அவர் மனதில் தேச பத்தி, தியாக உணர்வு ஆழமாக பதிய தேசிய மாணவர் படை அடித்தளமாக அமையும் என பேசினார். சீனியர் முதல்வர் நிஷ்காம்ய பிராணா மாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முதல்வர் சசிகலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை