| ADDED : டிச 26, 2025 05:16 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தொகுதியில் தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ.. மணிக்கண்ணன் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, உளுந்துார்பேட்டை தோல் இல்லா காலணி தொழிற்சாலை பணிகள், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளின் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இன்று தமிழகம் முதல்வர் வருகை புரிகிறார். அவரை வரவேற்க நிர்வாகிகள் சார்பில் அணி திரண்டு வரவேற்போம். கடந்த நான்கரை ஆண்டுகளில் உளுந்துார்பேட்டை தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையாக இருந்த அரசு மற்றும் அறிவியல் கல்லுாரி தி.மு.க.. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. புதிய பஸ் நிலையம், உளுந்துார்பேட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அறிவுசார் மையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. உடையானந்தலில் மேம்பாலம், 9 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா, பின்னல்வாடி கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைத்தல், அணைக்கட்டு சீரமைத்தல், தடுப்பணைகள், மாவட்ட ரத்த பரிசோதனை மையம், களமருதுார் புதிய போலீஸ் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.