உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார். திருக்கோவிலுார் அடுத்த அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லி முத்து மகள் நிஷா, 17; கடந்த 2ம் தேதி இரவு 7:00 மணி அளவில் அல்லி முத்து மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் பால் ஸ்டோருக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது, மகள் நிஷாவை காணவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை