விவசாய நிலத்தில் மலை பாம்பு மீட்பு
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் இருந்த 8 அடி நீள மலை பாம்பினை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் மகன் ரமேஷ். இவர் தனது விவசாய நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளார். நேற்று மதியம் 1:00 மணியளவில் விவசாய நிலத்தில் மலை பாம்பு இருந்ததைப் பார்த்து, கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) சக்திவேல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, 14 கிலோ எடையுள்ள 8 அடி நீள மலை பாம்பினை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து, பரிகம் வனக்காப்பாளர் ராஜேஷிடம் ஒப்படைத்தனர்.