உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  தேசிய சிலம்பம் போட்டி மாணவர்கள் சாதனை

 தேசிய சிலம்பம் போட்டி மாணவர்கள் சாதனை

மூங்கில்துறைப்பட்டு: நவ. 28-: பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் மூங்கில்துறைப்பட்டு மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். பெங்களூருவில் தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகள் கடந்த 16ம் தேதி நடந்தது. இப்போட்டிக்கு மூங்கில்துறைப்பட்டு வீரம் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் 21 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் 8 மாணவர்கள் முதலிடம் பெற்றும், 6 மாணவர்கள் இரண்டாம் இடமும் மற்ற மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் சல்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு, சமூக ஆர்வலர் கோகுல் ராம், ஊராட்சி செயலாளர் சிவா ஆகியோர் தலைமை தாங்கினர். பயிற்சியாளர்கள் அண்ணாமலை, ஜான் வின்சென்ட் ராஜ், விக்கி உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ