பைக்குகள் மோதல் ஒருவர் பலி
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே 2 பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் இறந்தார்.திருக்கோவிலுார் அடுத்த துறிஞ்சிப்பாட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அசோக், 23; திருக்கோவிலுாரில் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் காலை வேலைக்குச் செல்வதற்காக யமஹா பைக்கில் சென்றார். கனகனந்தல் சாலையில், கெங்கை அம்மன் கோவில் அருகே சென்ற போது, எதிரே வந்த பல்சர் பைக் மோதியது. பின்னால் வந்த அப்பாச்சி பைக்கும் மோதியது.இதில் படுகாயமடைந்த அசோக், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். அவரது தந்தை பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.