உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் விடுதி திறப்பு

அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் விடுதி திறப்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் புதிதாக மாணவர் விடுதி திறப்பு விழா நேற்று நடந்தது. சங்கராபுரம் காட்டு வனஞ்சூரில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரிக்கான மாணவர் விடுதி திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் லலிதா தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வெல்பேர் அலுவலர் தாமரைமணாளன் விடுதி கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கல்லுாரி துறை தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். 10ம் வகுப்பு படித்த மாணவர்கள் கல்லுாரியில் டிப்ளமோ வகுப்புகளில் சேர்க்கை பெற்று விடுதியில் தங்கி கல்வி பயில வேண்டும் என கல்லுாரி முதல்வர் கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை