உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றம்

விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றம்

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஊராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட 20 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம் பெறுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு நிர்வாக சிக்கல்களும், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதால், விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என விளந்தை, குலதீபமங்கலம், அத்திப்பாக்கம், கொடியூர் உள்ளிட்ட கிராமங்களில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்ட நாட்களில் இருந்து திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட 20 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க அதிகாரிகளை சந்தித்து மனுக்களை கொடுத்து வந்த நிலையில், தற்போது ஊராட்சிகளில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பது பொது மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை