உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ரூ.3 லட்சத்தை பறித்து சென்றதாக நாடகம் தனியார் நிதி நிறுவன அதிகாரி கைது

 ரூ.3 லட்சத்தை பறித்து சென்றதாக நாடகம் தனியார் நிதி நிறுவன அதிகாரி கைது

உளுந்துார்பேட்டை: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக பொய் புகார் கூறி நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்த சம்பவம் உளுந்துார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. உளுந்துார்பேட்டை அடுத்து எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் ஜான்லுாயிஸ்,28; இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எலவனாசூர்கோட்டையில் எல் அண்ட் டி பைனான்ஸ் கம்பெனியில் கலெக்ஷன் பீல்ட் ஆபீசராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவியிடம் 6 சவரன் செயினை வாங்கி. உளுந்துார்பேட்டை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்து 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றார். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் பைக்கில் உளுந்துார்பேட்டையிலிருந்து எறையூருக்கு பில்ராம்பட்டு கிராம ஏரி வழியாக சென்றார். அப்போது மரம் நபர்கள் இருவர் பட்டாகத்தியை காட்டி மிரட்டி 3 லட்சம் ரூபாய் பணத்தை பறித்து சென்றதா, உளுந்துார்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜான்லுாயிஸ் வங்கியில் வாங்கிய பணத்தை, குடும்பத்திற்கு தெரியாமல் வீட்டில் மறைத்து வைத்துவிட்டு பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக பொய் புகார் அளித்திருந்தது தெரிய வந்தது. மேலும், பைனான்ஸ் பணத்தை முறைகேடு செய்ததை மறைப்பதற்காக நாடகமாடியது தெரிய வந்தது. அதன் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார், பொய் புகார் கொடுத்து, போலீசாரை அலையவிட்டதாக வழக்குப் பதிந்து ஜான்லுாசை கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக் மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் உளுந்துார்பேட்டையில் பரப ரப்பை ஏற்படுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை