உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம்

மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம்

திருக்கோவிலூர்: மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவித் தொகையை எம்.எல்.ஏ., வழங்கினார். திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் கலியபெருமாள், 40; கடந்த 14ம் தேதி மதியம் கீழத்தாழனூர் கிராமத் தில் பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., சார் ஆட்சியர் ஆனந்த் குமார்சிங் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரசின் நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை வழங்கினர். உடன் ஒன்றியகுழு சேர்மன் அஞ்சலாட்சி அரசகுமார், தாசில்தார் ராமகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ