உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இடத்தை அளக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

இடத்தை அளக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

ரிஷிவந்தியம் : இளையனார்குப்பத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வாணாபுரம் அடுத்த இளையனார்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதி தனிநபர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. தனிநபர் கோரிக்கையின் பேரில் இடத்தை அளவீடு செய்யும் பணி நாளை நடைபெற உள்ளதாக தெரிவித்து, வருவாய்த்துறை சார்பில் ஊர் முக்கியஸ்தர்களுக்கு நேற்று காலை சம்மன் வழங்கப்பட்டது.கோவிலுக்கு சொந்தமான இடத்தை பட்டா வழங்கியதே தவறு, இதில் அளவீடு செய்ய எப்படி வருவீர்கள் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இளையனார்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 11:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், வி.ஏ.ஓ., ராஜா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பேசி சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில், 11.30 மணியளவில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை