அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரிஷி பஞ்சமி பூஜை
ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரிஷி பஞ்சமி பூஜை நடந்தது. பூஜையையொட்டி, நேற்று காலை 7:00 மணியளவில் கோவில் கிணற்றின் அருகே ரிஷிகளுக்கும், சித்தர்களுக்கும் அர்க்கியம் எனப்படும் நீர் அளித்து வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மூலவர் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் முத்தாம்பிகை அம்மனுக்கு மாகேஸ்வர பூஜை நடந்தது. நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர். கோவில் எழுத்தர் விமல்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.