உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரூ.13,965.72 கோடி கடனுதவி : கலெக்டர் தகவல்

ரூ.13,965.72 கோடி கடனுதவி : கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் இந்தாண்டு ரூ.13,965.72 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த்தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கடந்தாண்டு மாவட்ட அளவில் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்கு, ரூ.9,728 கோடியும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.719.40 கோடியும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.670 கோடியும், இதர கடன்கள் ரூ.1,013.26 கோடியும் என மொத்தம் ரூ.11,461 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.நடப்பாண்டில் கடந்த ஆண்டை விட கூடுதலாக கடனுதவி வழங்கிடவும், வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் சார்ந்த நிறுவனங்கள், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களுக்கும் கடனுதவி வழங்கிட வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், அரசின் பல்வேறு கடனுதவித் திட்டங்களின கீழ் இந்தாண்டு ரூ.13,965.72 கோடி கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித் உள்ளிட்டோர், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை